மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்மை குறைவா?. கவலை வேண்டாம். இதை மட்டும் கடைபிடியுங்கள் போதும்!.

Summary:

Don't feel for men cells count

நமது வாழ்க்கை முறையில் சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களுக்கு தேவையான ஆண்மையை அதிகரிக்கக் கூடிய சக்தி கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.  காலை உணவுக்குப்பின், சிறிதுநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின், 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள்.

தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால், ஆண்மை சத்தி கிடுகிடுவென அதிகரிக்கும்.  ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடக்கூடாது. ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்க வாழைப்பழம் சிறந்த உணவாகும். இதில் உள்ள பொட்டாசியம் வைட்டமின் சி உடலுக்கு தேவையான சக்தியை அதிகரிக்கும்.

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள்  மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ, அவற்றை வாங்கிச் சாப்பிடலாம். இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். முட்டையில் வைட்டமின்கள் பி6, பி5 உள்ளது. இது மன அழுத்தத்தைக் குறைக்கும், ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்யும். 

தற்போதைய வாழ்க்கை முறையில் ஆண்கள் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில் நாம் உண்ணும் உணவு பழக்கவழக்கம் முறை முற்றிலும் மாறுபட்டு விட்டது. எனவே தினமும் ஆண்கள் குறைந்தபட்சம் மூன்று கிலோமீட்டர் தூரமாவது நடக்க வேண்டியது அவசியம். 

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றை முற்றிலும் கைவிட வேண்டும். காய்கறிகள், பழ வகைகள் அதிகம் சாப்பிடுவது, ஆண்மை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். 


Advertisement