மக்களே உஷார்.. பச்சை முட்டையால் இவ்வளவு ஆபத்தா?..! கவனமாய் இருங்க..!!

மக்களே உஷார்.. பச்சை முட்டையால் இவ்வளவு ஆபத்தா?..! கவனமாய் இருங்க..!!



Don't eat raw eggs

காலை உண்ணும் உணவுடன் முட்டை சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஆரோக்கியம் என கருதப்படுகிறது. சிலர் வெறும் முட்டையை அப்படியே உடைத்து குடிக்கும் பழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. 

வேகவைத்த முட்டையில் 10% புரதமும், 90% நீரும் இருக்கிறது. பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற பல ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. கருவில் துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற வைட்டமின்கள் இருக்கின்றன. இது இதயம், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும்.

முட்டையை வேகவைத்து சாப்பிட்டால் தான் பலன் கிடைக்கும். பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அப்படியே முட்டையை உடைத்து சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படும். சருமத்தில் சிவத்தல், அரிப்பு, வீக்கம் உண்டாகும்.

முட்டையின் வெள்ளைகருவில் புரதம் அதிகமாக இருப்பதால் தீங்கு விளைவிக்கும். கோழிகளின் குடல் பகுதியில் சாலமோனல்லா எனப்படும் பாக்டீரியா காணப்படும். அது முட்டை ஓட்டின் உள்பகுதியில், வெளிப்பகுதியில் பரவி இருக்கும். அதிக வெப்பநிலையில் முட்டையை வேக வைத்தால் தான் அது சரியாகும். அதனை விடுத்து அப்படியே சாப்பிட்டால் உடலுக்கு பெரும் கேடு ஏற்படும்.