ஆண்களே உஷார்.. துளசி அதிகமா சாப்பிட்டா இவ்வளவு ஆபத்தா?.. அதிர்ச்சி உண்மை..! மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஆண்களே உஷார்.. துளசி அதிகமா சாப்பிட்டா இவ்வளவு ஆபத்தா?.. அதிர்ச்சி உண்மை..! மிஸ் பண்ணிடாதீங்க..!!


Disadvantages of thulasi tamil

பொதுவாகவே துளசி என்றாலே அதன் வாசமும், குணமும் தான் அனைவரது நினைவுக்கு வரும். ஏனென்றால் நூற்றாண்டுகளாகவே சளி, இருமல் போன்ற உபாதைகளுக்கு இந்தியாவில் துளசியை பயன்படுத்தி வருகின்றனர். 

தொடர்ந்து தோல் நோயை குணப்படுத்த, ஜீரண பிரச்சனை நீங்க, பூச்சிக்கடியை சரி செய்ய, தொற்றுகளை குணப்படுத்த, சுவாச பிரச்சனைகள் தீர என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் துளசி இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படியாக பல குணங்கள் இருந்தாலும், "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழியை கருத்தில் கொண்டு துளசியால் அதிகளவு பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து பெரும்பாலருக்கு தெரியாது. அதன்படி துளசியை அதிகளவு ஒன்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தற்போது காணலாம்.

health tips

ரத்தத்தில் சர்க்கரை மாறுபாடு :

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதனை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் தங்களுடைய உணவு முறையில் துளசியை சேர்த்துக் கொள்வதால், அது ரத்த ஓட்டத்தில் சில ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை மாறுபாடு உண்டாகும்.

கர்ப்ப காலத்தில் ஏற்றதல்ல :

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகளவு துளசி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சில சமயங்களில் அது கருக்கலைப்புக்கு வித்திட கூட வாய்ப்பு இருக்கிறது. துளசியை அதிகளவு உண்ணும்போது ரத்தஓட்டம் அதிகரிப்பதால் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தும்.

health tips

பற்களை கரையாக்கும் :

துளசியில் மெர்குரியின் தன்மை அதிகமாக இருக்கிறது. இதனால் அவற்றை மென்று சாப்பிடும் போது பற்களின் நிறம் மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

கல்லீரல் பாதிப்பு :

துளசியில் யூஜேனால்கள் நிரம்பி இருப்பதால், கடுமையான கல்லீரல் பாதிப்பு, குமட்டல், இதயத்துடிப்பை அதிகப்படுத்துவது மற்றும் வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

இனப்பெருக்கத்திற்கு எதிர்வினையூட்டும் :

மருத்துவஆராய்ச்சிகள் மூலம் துளசி நல்ல பலன்களை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதிகப்படியாக உண்பதால் ஆண்களுக்கு விந்தணுக்களின் அளவு குறைய நேரிடும். அத்துடன் பெண்களுக்கு கருப்பை மற்றும் கருப்பைவாய் சுருக்கம் போன்றவை ஏற்படும் என்று ஆராய்ச்சிகளின் முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.