உடலுறவால் டெங்கு நோய் பரவுமா? மருத்துவர்கள் கண்டறிந்த அதிர்ச்சி தகவல்!

உடலுறவால் டெங்கு நோய் பரவுமா? மருத்துவர்கள் கண்டறிந்த அதிர்ச்சி தகவல்!


Dengue spread from relationship

எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள், ஒருசில பாலியல் நோய்கள் முறையற்ற அல்லது பாதுகாப்பற்ற உறவால் பரவும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், தற்போது தீவிரமாக பேசப்படும் டெங்கு காய்ச்சலும் பாலியல் உறவு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள மேட்ரிட் என்னும் பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலையில் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு நோய் தோற்று இருப்பதாக கண்டறிந்தனர்.

Dengue

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், தனது ஆண் நண்பருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகவும், அவருடன் உறவில் ஈடுபட்ட பிறகே தனக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். டெங்கு எப்படி பாலியல் உறவால் பரவும் என்பதை நம்பாத ஆய்வாளர்கள், அந்த பெண்ணின் ஆண் துணையையும் பரிசோதித்தார்கள்.

இந்த சோதனையில் அந்த பெண்ணின் ஆண் நண்பரின் விந்தணுவை சோதனை செய்ததில் அதில் டெங்கு கிருமிகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், பாலியல் உறவு வழியாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு டெங்கு பரவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.