மகிழ்ச்சி செய்தி! சீனாவில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை! முக்கிய காரணம்!



corona-stoped-in-china

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தோடணியை கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. . இதுவரை இந்நோயால் 10,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 3,255 ஆக உயர்ந்து விட்டது. தற்போது சீன அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் பலனாக ஹுபெய் நகரில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி தொடர்ந்து 3-வது நாளாக புதிதாக யாரும் இந்த தொற்றுக்கு ஆளாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

china

ஆனாலும் சீனாவின் உஹானைச் சேர்ந்த 50,005 பேர் தொடர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் ஒட்டுமொத்த சீனாவிலும் 3  நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகள் யாரும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. 

அதற்க்கு முக்கிய காரணம் மக்களின் ஒத்துழைப்பு தான். எனவே இந்திய நாட்டு மக்களும் கவனமாக, அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லாமல் கொரோனா பரவுவது நிற்கும் வரை வீட்டிலே இருந்தால் நம் நாட்டிலும் கொரோனாவை விரைவில் விரட்டலாம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுவோம்.