Brinjal Benefits: சரும பாதுகாப்பு முதல் எலும்பு வரை.. கத்தரிக்காய் சாப்பிட கிடைக்கும் நன்மைகள்..!
உடலுக்கு தேவையான மக்னீசு தாதுப்பொருள் வழங்கும் பிரதான உணவுகளில் கத்தரிக்காய்க்கு தனி இடம் உண்டு.
இந்திய உணவுமுறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு காய்கறி என்றால், அதில் கத்தரிக்காய்க்கு தனி இடம் உண்டு. சாம்பாரில் தொடங்கி, காரக்குழம்பு என சென்றாலும் சரி, ரசம், மோர் போன்றவற்றுக்கும் சரி கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் பொரியல், அவியல் என சொல்லிக்கொண்டே செல்லலாம். சிலர் ஒருபடி மேலே சென்று கத்தரிக்காய் கொச்சி, சட்னி போன்றவற்றையும் தயார் செய்து சாப்பிடுவார்கள்.

கத்தரிக்காய் நன்மைகள்:
கத்தரிக்காய் சாப்பிடுவதால் அதில் உள்ள மக்னீசு தாதுப்பொருள் மூலமாக உடலின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான அனைத்து பிரச்னையும் சரியாகும். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கத்தரிக்காயில் இயற்கையான ஆக்சிஜனேற்றம் என்பது உள்ளது.
இதையும் படிங்க: உணவில் உப்பு போடுவதற்கு இது தான் காரணமா.? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

எலும்பு உறுதி:
இதனால் சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களின் அழுத்தத்தில் இருந்து நமது சருமத்தையும் பாதுகாக்கும். எலும்புகளை உறுதியாக்கும். இயன்றளவு நமது ஊர் மண்ணில் விளையும் நாட்டு கத்தரிகளை சாப்பிடுவது, நமது உடல் நலத்திற்கு கூடுதல் நன்மை சேர்க்கும்.