உணவில் உப்பு போடுவதற்கு இது தான் காரணமா.? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!



useful-benefits-of-salt

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. எந்த உணவிலும் உப்பில்லையெனில் அந்த உணவு ருசிக்காது. உப்பை நாம் சமையலில் சேர்க்கும் பொழுது, மேலும் சுவையைக் கூட்டும். உணவுப் பொருட்களுக்கு சுவையூட்டுவதுடன் அது செரிமானத்திற்கும் உதவுகிறது. கல் உப்பு என்பது இயற்கையான கனிம உப்பாகும். இது சுத்திகரிக்கப்படாத இயற்கையான சோடியம் குளோரைடு.

கடல் நீரை ஆவியாக்கி அதிலிருந்து நேரடியாக பெறப்படும் உப்பில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் உள்ளன. ஆனால், நவீன காலத்தில் இந்த உப்பு அதிக வெண்மை நிறம் பெறுவதற்காக பலவிதமான கெமிக்கல் பிராசஸ்களுக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. உப்பு (Salt) என்பது சுவைக்காக மட்டும் நாம் பயன்படுத்தாமல், உடலில் இருக்கும் நீர்ச்சத்தை சரியான அளவில் வைக்கவும், உடலின் செயல்பாடுகள் சீரமைக்கவும் உதவும்.

உடலில் நீரேற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துவது, உடலில் இருக்கின்ற தீய நச்சுக்களை நீக்குவது, இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது போன்றவற்றிற்கு உப்பு பயன்படுகிறது. கல் உப்பில் நம் உடலிற்குத் தேவையான பல்வேறு தாதுக்கள் நிறைந்துள்ளதால் நம் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்.

Salt

உப்பு மருத்துவம் என்பது உப்புக் கரைசலை நாம் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் முறையாகும். உடலில் ஏற்பட்டுள்ள வெளிக்காயங்களைச் சுத்தம் செய்ய உப்புக்கரைசல் பயன்படுத்தப்படுகிறது. அடுத்து, நாம் கண்களில் அணியும் காண்டாக்ட் லென்ஸ்களை சுத்தம் செய்வதற்கும் உப்புக்கரைசலை பயன்படுத்தப்படுகிறது. நீரிழப்பு அல்லது ரத்த அளவை உடனே சரி செய்ய நரம்புகளின் வழியாக உப்புக்கரைசல் செலுத்தப்பட்டு, மருத்துவ உதவி செய்யப்படுகிறது.

அத்துடன் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், இதனை குடும்பத்தின் நல்வாழ்விற்காக வாஸ்து முறைக்காக பயன்படுத்துகின்றனர். அதாவது, வாஸ்து சாஸ்திரத்தில் கல் உப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டின் துர்சக்திகளை விரட்டி திருஷ்டியைப் போக்கும் வல்லமை உப்புக்கு உண்டு என நம்புகின்றனர். மேலும், உப்பு எதிர்மறை ஆற்றலைக் குறைத்து, வீட்டிற்கு வளங்களையும், மகிழ்ச்சியும், அமைதியும் கொண்டுவரும் என்று அவர்கள் நம்புகின்றனர்.