மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாய் பிரச்சனையா?.. இந்த பழச்சாரை 40 நாட்கள் குடித்தால் போதும்..! அசத்தல் டிப்ஸ்.!!

Summary:

மாதவிடாய் பிரச்சனையா?.. இந்த பழச்சாரை 40 நாட்கள் குடித்தால் போதும்..! அசத்தல் டிப்ஸ்.!!

மாதுளைப்பழம் பெரும்பாலானோரால் விரும்பி சாப்பிடும் கனியாக உள்ளது. இது சுவையில் இனிப்புடன் இருந்து, நமது உடலுக்கும் பல தித்திப்புகளை கொடுத்து பாதுகாக்கிறது. மாதுளையில் இனிப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் உள்ளன. இதில், இனிப்பு மற்றும் புளிப்பு வகை மாதுளைகள் உடலுக்கு சத்துக்களை வழங்குகிறது. 

மாதுளையின் பூ, பழம், பட்டை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை அழித்து உடலை பாதுகாக்கிறது. இதனால் நோய் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இனிப்பு சுவையுள்ள மாதுளையை சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். பித்தத்தை போக்கி, இருமலை நிறுத்தும்.

மாதுளைப்பழ சாறினை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால், பெண்களின் மாதவிடாய் பிரச்சனை சரியாகும். பெண்களின் நினைவாற்றல் பெருகும். மேலும், இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.  இதய பலவீன பிரச்சனை சரியாகும். சீதபேதி போன்ற பிரச்சனையும் குணமாகும். தொண்டை, மார்பகம், நுரையீரல் மற்றும் குடலுக்கு அதிக வலிமை கிடைக்கும்.


Advertisement