அமிர்தத்தையே தோற்கடிக்கும் வெந்நீர்.. இதில் இவ்வளவு விஷயமிருக்கா.?!



benefits-of-hot-water-in-all-season

வெந்நீர் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. காலை எழுந்தவுடன் மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன் வெந்நீரை அருந்துவது மனஅழுத்தத்தைக் குறைத்து, குடல் இயக்கத்தை தூண்டி செரிமானத்தை சீராக்குகிறது. எனவே, காலை எழுந்ததும் வெந்நீரை பருகுகினால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

சில நேரங்களில் நம் உடல் சாப்பிட்ட உணவை செரிக்க சிரமப்படலாம். அப்போது, அந்த உணவைச் சிதறடித்து கரைத்து செரிமானத்துக்கு உதவுகிறது. தினமும் வெந்நீரை அருந்துவதால் செரிமான மண்டலம் சுறுசுறுப்பாகி, குடலின் இயக்கம் மேம்படும். மேலும், காலை வெந்நீரை குடிப்பதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு, கலோரி எரிப்பும் வேகமாக நடக்கிறது.

benefits

உணவுக்கு முன் சிறிது வெந்நீரை அருந்துவது உணவு உட்கொள்ளும் அளவை குறைத்து, எடை குறைப்பிற்கும் உதவுகிறது. அதனால் எடையைக் குறைக்க விரும்புவோர் காலை வெந்நீரை அருந்தும் பழக்கத்தை கடைபிடிப்பது அவசியம். வெந்நீர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எளிதாக வழங்க உதவுகிறது. 

இதையும் படிங்க: இந்த நோய் இருப்பவர்கள் வெந்தயத்தை கண்டிப்பாக உணவில் சேர்க்க கூடாது.. ஏன் தெரியுமா.!?

மேலும், நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திருப்பதுடன், மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தையும் குறைக்கிறது. உடல் சோம்பல் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் வெந்நீர் மிகச் சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது. இது இரத்த ஓட்டத்தையும் உடற்சுழற்சியையும் மேம்படுத்தி, காயமடைந்த தசைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. 

benefits

வெந்நீரில் நனைத்த துணியை தசைகளின் மேலே வைத்து மசாஜ் செய்தால் வலி குறைந்து, நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். வெந்நீரை குடிப்பதற்காக மட்டுமல்லாமல் குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். மேலும், தசை மற்றும் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றையும் குறைக்க உதவுகிறது. 

இது சளி, காய்ச்சல் போன்ற நோய்களை தணிக்கவும், கால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவற்றையும் குறைக்கவும் உதவுகிறது. வெந்நீரை முறையாகப் பயன்படுத்துவது, நம் உடலை இயற்கையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும்.

இதையும் படிங்க: இந்த டைம்ல தயிர் சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்! சாப்பிட சிறந்த நேரம் எது? இதில் கொட்டிகிடக்கும் பலன்கள்...