முருங்கை கீரையின் மகத்துவம் உங்களுக்கு தெரியுமா..? தெரிஞ்சா கண்டிப்பா விடமாட்டீங்க..!!

முருங்கை கீரையின் மகத்துவம் உங்களுக்கு தெரியுமா..? தெரிஞ்சா கண்டிப்பா விடமாட்டீங்க..!!



Benefits of drumstick leaves

முருங்கையை பற்றி பேசினாலே ஆண்கள் உடம்பில் ஒருவிதமான சிலிர்ப்பு உண்டாகும். அதற்கு காரணம் முருங்கைகாயின் மகத்துவம் தான். முருங்கை காய் மட்டுமல்ல முருங்கை கீரையும் ஆண் பெண் இருவருக்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது தான். 

அப்படிப்பட்ட முருஙங்கை கீரையின் நன்மைகளையும் அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்துவது என்பதை இங்கே பார்ப்போம். 

Murungai keerai

ஆண்களுக்கான பயன்கள்: முருங்கைக் கீரையை நெய்யில் பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும், வீரியமும் உண்டாகும். தாது விருத்தியும் உண்டாகும். இதை உணவில் 40 நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கை இன்பமாகும்.

பெண்களுக்கான பயன்கள்: இதை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை தடுக்கலாம். இக்கீரை இரத்த விருத்திக்கு மிகவும் பயன்படுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும். இக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்று நோயும், அடி வயிற்று வலியும் நீங்கும். 

Murungai keerai

மருத்துவ பயன்கள்: இக்கீரையை விளக்கு எண்ணெய் விட்டு வதக்கி இடுப்பு வலி, வாத மூட்டு வலி உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்தல் வலி நீங்கும்.

இலையையும், மிளகையும் நசுக்கி சாறு எடுத்து நெற்றியல் தடவினால் தலைவலி நீங்கும். இலையை அரைத்து வீக்கங்கலின் மீது பூசினால் வீக்கம் தனியும். இக்கீரையை அரைத்து அதனின்று பிழிந்து எடுத்த சாறுடன் கொஞ்சம் சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டையில் தடவினால் இருமல் குரல் கம்மல் நீங்கும். இலையை அரைத்து பிழிந்து சாறு எடுத்து சில துளிகள் கண்ணில் விட்டால் வலிகள் நீங்கும். எள்ளும் முருங்கைக் கீரையையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த வாய்வால் ஏற்படும் மார்பு வலி நீங்கும்.

Murungai keerai

இக்கீரையை பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும் பொழுது ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்து பொரியலை தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் . உடல் அழகும், பலமும், மதர்ப்பும் கொடுக்கும். முருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

Murungai keerai

முருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி, கை கால் அசதியும் நீங்கும். டைமன்ட் கற்கண்டு தூளுடன் கீரையை வதக்கி சாப்பிட்டால் சுவையோடு மட்டுமில்லாமல் நீர் உஷ்ணம் சம்பந்த பட்ட பிணிகளும் நீங்கும்.