அம்மா அரிக்கிறது என குழந்தை சொல்கிறதா?... குழந்தைக்கு பூச்சி மருந்து எப்போது கொடுக்கலாம்?.. அரிப்பு எதனால் ஏற்படுகிறது?..!Baby Worming Tips Tamil kuzhanthai Kudarpulu

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் விஷயங்களில் முக்கியமாக இருப்பது குடற்புழுத்தொல்லை. மண் தரை, அசுத்தமான இடம் மற்றும் நீரில் விளையாடுவதால், செருப்பு அணியாமல் நடப்பதால், உணவு சாப்பிடும் முன் கைகளை கழுவி சுத்தம் செய்து சாப்பிடாத காரணத்தால் குடற்புழு பிரச்சனை ஏற்படும். 

குடற்புழு பிரச்சனை இருப்பின் சரிவர சாப்பிடாமல், உடல் மெலிந்து, நிறம் வெளிர்ந்து காணப்படுவார்கள். சில நபர்களுக்கு வறட்டு இருமல், வயிற்றுப்போக்கு ற்படும். சாலையோர உணவகத்தில் நேரடியாக கைகளால் பரிமாறப்படும் உணவுகளால் அமீபியாசிஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. 

Baby Worming

இவ்வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் முன்பும், பின்னும் வயிற்று வலியால் அவதிப்பட்டு அவ்வப்போது மலம் கழிக்க வேண்டியதுபோன்ற உணர்வை வைத்திருப்பார்கள். குழந்தைகளுக்கு சருமத்தில் வெள்ளைத்திட்டு ஏற்படும். புழுக்கள் ஆசனவாயில் முட்டை இடுவதால், குழந்தைகளுக்கு அரிப்பு ஏற்படும். 

இதனை அறியாமல் குழந்தைகள் ஆசனவாய் பகுதியை சொறிந்து, பின்னர் வாயில் கைகளை வைத்தால் பூச்சி உடலுக்கு செல்லும். கொக்கிப்புழு நாளுக்கு 0.2 மி.லி இரத்தத்தை உறிஞ்சும். இதனால் குடற்புழு பிரச்சனை இருப்பவருக்கு இரத்த சோகை ப்ரஹனையும் ஏற்படும். குடற்புழுவை ஒழிக்க குழந்தைகளுக்கு திரவ மருந்தும், பெரியவர்களுக்கு மாத்திரையும் வழங்கலாம்.

Baby Worming

புழுக்களின் பல வகைகள் இருப்பதால், எவ்வகை புழு என்பதை மலபரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம். 2 வயதுக்கு அதிகமான குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். வயது மற்றும் நோய் அறிகுறிக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

சுயமாக De-Worming என்ற மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளை எப்போதும் எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொண்டால் 100 % புழுக்கள் அழிந்துவிடும். சருமத்தில் இருக்கும் வெள்ளை தழும்புகள், தடிப்புகளும் குறையும்.