வீட்டில் தனியாக இருந்த காதலர்கள்; பெண்ணின் தந்தை நேரில் பார்த்ததாள் நடந்த விபரீதம்

வீட்டில் தனியாக இருந்த காதலர்கள்; பெண்ணின் தந்தை நேரில் பார்த்ததாள் நடந்த விபரீதம்


man-killed-his-daughter-with-lover

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் வசிப்பவர் இக்பால். இவருக்கு பவுசியா என்ற மகள் இருந்துள்ளார். பவுசியா அருகில் வசிக்கும் இம்ரான் என்பவரை  காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ரகசியமாக சந்தித்தும் வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பவுசியாவின் தந்தை இக்பால் மிகுந்த ஆத்திரம் அடைந்தார்.

இதனையடுத்து பவுசியாவின் நடவடிக்கையில் மிகுந்த அதிருப்தி அடைந்த அவரும், பவுசியாவின் மாமா உட்பட சில உறவினர்களும் பவுசியா மற்றும் இம்ரானை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.

Pakistan

தொடர்ந்து பவுசியாவை தீவிரமாக கண்காணித்த குடும்பத்தினர், இக்பாலை சந்திக்க பவுசியா சென்றபோது ரகசியாமாக பின்தொடர்ந்தனர். இம்ரான் வீட்டில் தனியாக இருந்த  அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

குடும்ப கவுரவத்தை கெடுத்துவிட்டாயே என கூறியவாறே, இக்பாலும் அவரது உறவினர்களும் இம்ரானையும், பவுசியாவும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Pakistan

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலிசார், இக்பால் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் ஆண்டுக்கு ஆயிரம் பெண்கள் கவுரவ கொலைகள் செய்யப்படுவதாகவும், பெரும்பாலும் சகோதரர் மற்றும் கணவனாலுமே இந்த கொலைகள் செய்யப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.