லைப் ஸ்டைல் General

செல்பி ஆசையால் அணையில் தவறி விழுந்த இளைஞர்; காப்பாற்ற முயன்றவரும் பலியான பரிதாபம்

Summary:

கெலவரப்பள்ளி அணையில் வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் செல்பி எடுத்தனர். அப்போது ஒரு இளைஞர் தவறி அணையில் விழுந்தார். அவரை காப்பாற்ற அணையில் குதித்தவரும் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அணைகள் மற்றும் ஆற்று ஓரங்களில் செல்பி எடுக்க தடைவிதித்துள்ளனர். ஆனால் அவற்றையெல்லாம் கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் செல்பி மோகத்தால் உயிரை மாய்த்துக்கொள்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்பாட்டுக்கு வந்த பின்பு செல்பி மோகமும் அதிகரித்துவிட்டது. எங்கு சுற்றுலா சென்றாலும் இடங்களை ரசிப்பதை விட செல்பி எடுக்கும் நேரங்களே அதிகம். 

selfie in dam க்கான பட முடிவு

இதேபோல தான் கெலவரப்பள்ளி அணையை பார்வையிட வட மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் சென்றுள்ளனர். 

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் தமிழக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக பெரும்பாலான அணைகள் மளமளவென நிரம்பின. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையும் நிரம்பியுள்ளது.

கெலவரப்பள்ளி அணை க்கான பட முடிவு

அப்போது செல்பி எடுத்த ஒரு இளைஞர் அணையில் தவறி விழுந்தார். இதனைக்கண்ட அங்கிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் அணையில் விழுந்தவரை காப்பாற்ற தானும் அணையில் குதித்தார். இதில் 2 பேரும் உயிரிழந்தனர்.

செல்பி எடுத்தப்போது உடனிருந்த மற்ற 2 பேரும் தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 


Advertisement