முதல் படமே அடிதடி ஆக்ஷன்தான்.! லோகேஷ் கனகராஜின் பைட் கிளப்!! வெளியானது அதிரடி டீசர்!!

முதல் படமே அடிதடி ஆக்ஷன்தான்.! லோகேஷ் கனகராஜின் பைட் கிளப்!! வெளியானது அதிரடி டீசர்!!


logesh ganagaraj fight club movie teaser viral

தமிழில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தொடர்ந்து கைதி,மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றிபடங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மேலும் அண்மையில் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் 171வது படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து ஜி ஸ்குவாட் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை வெளியிட உள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாகும் முதல் திரைப்படம் ஃபைட் கிளப்.

இந்தப் படத்தை அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கியுள்ளார். இதில் உறியடி விஜயகுமார் ஹீரோவாக நடித்துள்ளார். கார்த்திகேயன், சந்தானம் சங்கர்தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்நிலையில் பைட் கிளப் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.