உருமாறிய கொரோனா வைரஸால் நிரம்பி வரும் மருத்துவமனைகள்.! இங்கிலாந்தில் 4 அடுக்கு ஊரடங்கு.!

உருமாறிய கொரோனா வைரஸால் நிரம்பி வரும் மருத்துவமனைகள்.! இங்கிலாந்தில் 4 அடுக்கு ஊரடங்கு.!



new virus in england


உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக கொரோனா பரவல் குறைந்து வந்தநிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இங்கிலாந்தில்  இந்த வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு பல பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. 

இங்கிலாந்து முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மிக ஆபத்தான வகையில், தற்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது எனவும், லண்டன் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு முழுவதும் நோயாளிகளால் நிரம்பியுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளை தவிர்த்து, மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத கடினமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

corona

இங்கிலாந்தில்  53,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வைரஸ் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  அந்த நாட்டின் பல பகுதிகளில் 4 அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். உருமாறிய புதிய வகை அதிதீவிர கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சூழலில் இரண்டாவது தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.