உலகம் லைப் ஸ்டைல் Corono+

19,811 பேர் உயிரிழப்பு..! ஆனால், இதுவரை எத்தனை பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உயிர் பிழைத்துள்ளார்கள் தெரியுமா? ஆச்சரிய தகவல்.!

Summary:

Total number or cases recovered from corono worldwide

உலகளவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என அணைத்து நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. கொரோனவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தியாவிலும் கொரோனவை தடுக்க இன்றில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை அடுத்து, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனாவால் இதுவரை 19,811 பேர் உயிர் இழந்துள்ளனர். 446,946 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதெல்லாம் சரி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உலகளவில் இதுவரை எத்தனை பேர் குணமாக்கியுள்னனர் தெரியுமா.?

உலகளவில் இதுவரை 112,058 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். எனவே கொரோனவை நினைத்து யாரும் அச்சமடைய வேண்டாம். அரசு வலியுறுத்தும் நடைமுறைகளை சரியாக பின்பற்றினாலே கொரோனாவில் இருந்து எளிதாக தப்பிக்கலாம்.


Advertisement