சினிமா

பிரபலங்கள் பலரும் ஒரே வீட்டில்! பிக்பாஸை போலவே பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி! வைரலாகும் வீடியோ!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே ஜீ தொலைக்காட்சியில் பிரபலங்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருப்பது போன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் 100 நாட்கள் எத்தகைய வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு வாக்குவாதங்கள், மோதல்கள்,உற்சாகங்கள் என  தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பிரபலமான ஜீ தொலைக்காட்சியில் ஜீ குடும்ப விருதுகள் முன்னோட்டம் என்ற நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் 26 பிரபலங்கள் மூன்று நாட்கள் ஒரே வீட்டில் ஒன்றாக உள்ளனர்.

அந்த வீட்டிற்குள் அவர்கள் ஜாலியாக பேசிக் கொள்வது, வாக்குவாதம் செய்வது போன்ற அனைத்தையும் ஜீ தொலைக்காட்சி ஒளிபரப்பாக்கி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் இது பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே உள்ளது என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Advertisement