அது இன்னும் முடியலை.. யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட அசத்தலான டீசர்! குவியும் பாராட்டுகள்!!

அது இன்னும் முடியலை.. யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட அசத்தலான டீசர்! குவியும் பாராட்டுகள்!!



yuvan-shankar-raja-released-anantham-teaser

தமிழ் திரையுலகில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம்வருபவர் மணிரத்னம். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பிரியா. தற்போது அவரது இயக்கத்தில் உருவாக்கியுள்ள இணைய தொடர் “அனந்தம்”. இது அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 தலைமுறைகளின் வாழ்க்கையை, மகிழ்ச்சி, சோகம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளை சொல்லும் கதையாக உருவாக்கியுள்ளது. 

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் வி.முரளி ராமன் தயாரித்துள்ள இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில்
பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். மேலும் அவருடன் சம்பத், அரவிந்த் சுந்தர், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய்,  இந்திரஜா, அஞ்சலி ராவ், மிர்னா மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

பகத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த தொடருக்கு ஏ.எஸ்.ராம்  இசையமைத்துள்ளார்.  இந்த அனந்தம் தொடர் வரும் 22ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் இதன் டீசரை யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் தொடர் வெற்றி பெறபலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.