சிம்பு ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! மாநாடு குறித்த செம அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் யுவன்!!

சிம்பு ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! மாநாடு குறித்த செம அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் யுவன்!!


yuvan-gave-update-about-maanadu-movie-first-song-releas

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக பலம்பெறும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் பிரேம் ஜி, எஸ் ஜே சூர்யா, டேனியல் போப், கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல்  பாடல்  மே 14 ரம்ஜானை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் மரணம் அடைந்தார். இந்நிலையில் பாடல் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில், விரைவில் மாநாடு படத்தின் பாடல் ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் எதிர்பார்ப்பில் உள்ளனர்.