சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்... இர்ஃபான் எடுத்த அதிரடி முடிவு...YouTuber Irfan gender reveal problem

தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு இணையாக யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்தான் யூடியூபர் இர்பான். உணவு விமர்சகரான இவர் கையேந்தி பவன் முதல் பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வரை சென்று அங்குள்ள உணவுகளை சாப்பிட்டு அதன் தரம் மற்றும் சுவை குறித்து ரிவியூக்களை வெளியிடுவார்.

இர்பான் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உணவு ரிவியூக்களை வெளியிட்டு பிரபலமாகியுள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கர்ப்பமான தனது மனைவியை அழைத்து கொண்டு துபாய்க்கு சென்று சிசுவின் பாலினத்தை தெரிந்து கொண்டு வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

YouTuber irfan

சிசுவின் பாலினத்தை வெளியிட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி விசாரணைக்காக அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினரிடம் இர்ஃபான் வாட்ஸ் ஆப் மற்றும் செல்போன் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் யூடியூப்பிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆரம்பத்திலேயே வசூல் வேட்டையை தொடங்கிய அஜித் படம்...OTT மட்டும் இத்தனை கோடிக்கு வாங்கியுள்ளதா!!

இந்நிலையில் என்னதான் இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் அவருடைய குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ பதிவிட்டதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: புதிய தொடரில் களமிறங்கும் நடிகை ரேஷ்மா... எந்த தொலைக்காட்சி, யாருக்கு ஜோடியாக தெரியுமா.?