ஆரம்பத்திலேயே வசூல் வேட்டையை தொடங்கிய அஜித் படம்...OTT மட்டும் இத்தனை கோடிக்கு வாங்கியுள்ளதா!!Netflix bought new ajith movie 95 lakh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அதிக ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர் நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் "குட் பேட் அக்லி". அஜித்தின் 63வது படமாக உருவாகும் இப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.

மேலும் குட்பேட் அக்லி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில் படம் பொங்கல் 2025 ரிலீசாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Good bad akkli

இந்நிலையில் சமீபத்தில் தான் படத்தின் சண்டை காட்சிகளுடன் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி பிரபல OTT நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ரூ. 95 கோடி கொடுத்து இப்படத்தை வாங்கியுள்ளதாம். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: புதிய தொடரில் களமிறங்கும் நடிகை ரேஷ்மா... எந்த தொலைக்காட்சி, யாருக்கு ஜோடியாக தெரியுமா.?

இதையும் படிங்க: சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!