பென்ஸ் கார் வாங்கிய எருமைசானி புகழ் விஜய்.. கண்கலங்கி நெகிழ்ச்சி பதிவு வைரல்..!



youtube-famous-erumasaani-vijay-get-benz-car-his-insta

யூடியூபில் எருமை சாணி என்ற பக்கத்தின் மூலமாக பிரபலமானவர் விஜய். இவர் தற்போது பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறார். ஹிப் பாப் ஆதியுடன் 2 படங்களில் நடித்துள்ளார். 

மேலும், தனது யூடியூப் பக்கத்திலும் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்த வீடியோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. 

கோவையில் பிறந்து வளர்ந்து, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கும் விஜய், தனது வாழ்நாள் சாதனையாக நினைத்து வைத்திருந்த பென்ஸ் ரக சொகுசு காரை வாங்கியுள்ளார். 

Youtube

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள விஜய், "எனது முதல் கார்.. எனது சிறுவயதில் இருந்து பென்ஸ் காரில் உட்கார்ந்து பார்த்தாவது விட வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். அதனை வாங்குவேன் என்று நினைக்கவில்லை. 

இன்று அதுவும் நடந்துவிட்டது. எனது சொந்த சம்பாத்திய பணத்தில், எனக்கு பிடித்த பென்ஸ் காரை வாங்கிவிட்டேன். என்னால் அந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. என்னை ஆதரித்த அனைத்து மக்களுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.