தளபதியின் வாரிசுக்காக ரீமேக்காகும் சூப்பர் ஹிட் யூத் பாடல்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தளபதியின் வாரிசுக்காக ரீமேக்காகும் சூப்பர் ஹிட் யூத் பாடல்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!youth-movie-song-remake-in-varisu-movie

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகின்றார். இது விஜய்யின் 66 வது படமாகும். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இது குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எமோஷனல் செண்டிமெண்ட் படமாக உருவாகிறது.

இந்த படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது.

Varisu

வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தில் விஜய்யின் ஹிட் பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் மாஸ்டர் படத்தில் கில்லி பட கபடி கபடி பாடல் இடம்பெற்று ரசிகர்களை குதூகலமடைய வைத்தது குறிப்பிடதக்கது.