இந்தியா சினிமா விளையாட்டு

பொது இடத்தில் பிரபல நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர்கள்! கதறும் நடிகை

Summary:

Youth abused rakhi sawant

ஆபாச புகைப்படங்கள் அல்லது சர்ச்சையான கருத்துக்களால் எப்போதும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த். இப்படி பிரபலம் தேடும் ராக்கி சவாந்த் தற்பொழுது புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். 

இந்த சம்பவமானது கடந்த மார்ச் 2ஆம் தேதி பஞ்சாபில் ஒரு பொது இடத்தில் அரங்கேறியுள்ளது. ராக்கி சவாந்த் விரஸ்லிங் போட்டிக்கான ஆதரவை திரட்டுவதற்காக பஞ்சாப் சென்றுள்ளார். அங்கு இந்திய விரஸ்லிங் வீரர் கிரேட் காலியுடன் இணைந்து இந்த புரோமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

காலியுடன் திறந்தவெளி ஜீப்பில் ராக்கி சவாந்த் நின்று கொண்டு பேசியவாறு சாலையில் சென்றுள்ளார். அப்போது கும்பலாக வந்த இளைஞர்களில் சிலர் ராக்கியின் உடலில் தவறான முறையில் கையை வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராக்கி உடனே ஜீப்பை விட்டு இறங்கி அந்த இளைஞர்களை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் அதற்குள் ஓடிவிட்டனர். 

அதனைத் தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுத ராக்கி சவாந்த் பஞ்சாபில் தனக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் இனிமேல் தான் பஞ்சாபில் காலடி வைக்கப்போவதுமில்லை என பேசியுள்ளார். 


Advertisement