சினிமா

தன் குழந்தைக்கு தமிழ் கடவுளின் அழகிய பெயரை சூட்டிய யோகிபாபு! என்ன பெயர் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனது காமெடியால்

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனது காமெடியால் ரசிகர்களை அசர வைத்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் யோகிபாபு. துவக்க கால கட்டத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் தனது விடாமுயற்சியாலும், திறமையாலும் முன்னணி ஹீரோவாக அவதாரமெடுத்தார். மேலும் தற்போது ஹீரோவாக, காமெடி நடிகராக யோகிபாபு கைவசம் பல படங்கள் உள்ளன.

இவருக்கு திரைத்துறையில் மட்டுமின்றி அவரது சொந்த வாழ்க்கையிலும் தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. யோகிபாபுவுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் தனது குலதெய்வ கோயிலில் மிகவும்  எளிமையாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அண்மையில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சமீபத்தில் யோகிபாபு தனது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை தனது வீட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார். இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு  வாழ்த்து தெரிவித்துள்ளனர். யோகி பாபு தனது மகனுக்கு தமிழ் கடவுள் முருகனின் பெயர்களில் ஒன்றான விசாகன் என்பதை வைத்துள்ளார். அந்த விழா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement