பிரபல நடிகையை துரத்தி துரத்தி காதலிக்கும் யோகிபாபு!! யாருனு தெரிஞ்சா நீங்களே ஷாக்காகிருவீங்க!!
பிரபல நடிகையை துரத்தி துரத்தி காதலிக்கும் யோகிபாபு!! யாருனு தெரிஞ்சா நீங்களே ஷாக்காகிருவீங்க!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. சாதாரண ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.
மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் கூர்கா, தர்ம பிரபு உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலித்து சுற்றி திரிந்ததும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து யோகிபாபு தற்போது நடிகர் அஞ்சலியை துரத்தி துரத்தி காதலிக்கவுள்ளார்.
அதாவது சொன்ன புரியாது பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ள புதிய படத்தில் பேஸ்கட்பால் பயிற்சியாளராக அஞ்சலி நடிக்கவுள்ளார். அவரை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் அவர்களுடன் விஜய் டிவி ராமரும் நடிக்கஉள்ளார். தமிழ் சினிமாவில் பலூன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சினிஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.