அடேங்கப்பா.. உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகர் யோகிபாபு! குவியும் வாழ்த்துக்கள்! அப்படியென்னதான் விசேஷம் தெரியுமா?

அடேங்கப்பா.. உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகர் யோகிபாபு! குவியும் வாழ்த்துக்கள்! அப்படியென்னதான் விசேஷம் தெரியுமா?


yogibabu blessed with boy baby today

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் தனது காமெடியால் அசத்தி கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் தனது விடாமுயற்சியாலும், திறமையாலும் தற்போது முன்னணி ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் யோகிபாபுவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் தனது குலதெய்வ கோயிலில் மிகவும்  எளிமையாக திருமணம் நடைபெற்றது . இத்தம்பதிகளின் வரவேற்பு மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் நடத்த முடியாமல் போனது. 

Yogi babu

இந்த நிலையில், தற்போது யோகிபாபு மற்றும் மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.  தாயும் சேயும் நலமாக உள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் யோகி பாபு- மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.