திடீர் ட்விஸ்ட்! இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நாயகனாக யோகி பாபு! அப்போ வடிவேலு?

திடீர் ட்விஸ்ட்! இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நாயகனாக யோகி பாபு! அப்போ வடிவேலு?


Yogi babu is the second choice for imsai arasan 24 aam pulikesi

இயக்குனர் சங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. படத்தில் நாயகனாக வைகைப்புயல் வடிவேலு நடித்திருந்தார். பல வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவம் வெற்றிபெற்றது.

இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தினை இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் மீண்டும் வடிவேலுவை வைத்து எடுக்க திட்டமிடப்பட்டது. அதற்காக செட் அமைத்து, படப்பிடிப்பும் ஆரம்பமானது. ஆனால் பட குழுவினருக்கும், வடிவேலுக்கும் ஏற்பட்ட தகராறில் படத்தில் பாதியில் இருந்து வெளியேறினார் வடிவேலு. இதனால் படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினார்.

Vadivelu

ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டு வடிவேலு மீண்டும் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை வடிவேலு ஷூட்டிங் வராததால் இந்த படத்தில் நடிகர் யோகி பாபுவை நடிக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது தர்மபிரபு என்ற நகைச்சுவை படத்தில் எமன் வேடத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு. அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனாலும் யோகிபாபு நடிப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

Vadivelu