சினிமா

விரைவில் நடிகர் யோகி பாபு வீட்டில் கெட்டி மேளம்! இதன் விஷயமா? அவரே கூறிய தகவல்!

Summary:

Yogi babu going to marry soon

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. சாதாரண ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.

மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபுவிற்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வைரலாகி வருகிறது. இதுகுறித்து கூறிய யோகிபாபு, திருமணம் நடக்கும் போது கண்டிப்பாக அனைவரிடமும் சொல்வேன்.

என் அம்மா பெண் பார்த்து வருகிறார். அதற்காக தான் வீட்டிற்கு வந்துள்ளார். என தன்னுடைய திருமணம் குறித்து முதல் முறையாக பகிர்ந்துள்ளார் யோகிபாபு. இதற்க்கு இப்போதே பல ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கிவிட்டனர்.


Advertisement