சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக இந்த நடிகையா? வைரலாகும் எங்கள் அண்ணன் பாடல் வீடியோ! குவியும் லைக்ஸ்கள்!!
சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக இந்த நடிகையா? வைரலாகும் எங்கள் அண்ணன் பாடல் வீடியோ! குவியும் லைக்ஸ்கள்!!

மிஸ்டர் லோக்கல் படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயனின் 16 வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் மற்றும் அவரது தங்கை கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இவர்களுடன் யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்பொழுது நம்ம வீட்டு பிள்ளை படத்தின் முதல் சிங்கிள், எங்கள் அண்ணன் என்ற பாடலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.