அடடா.. இப்படி மிஸ் பண்ணிட்டாரே.!! எதற்கும் துணிந்தவன் படம் முதலில் யாருக்காக எழுதப்பட்டுள்ளது பார்த்தீங்களா.!

அடடா.. இப்படி மிஸ் பண்ணிட்டாரே.!! எதற்கும் துணிந்தவன் படம் முதலில் யாருக்காக எழுதப்பட்டுள்ளது பார்த்தீங்களா.!


yedarkum-thuninthavan-movie-first-written-for-simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ்  இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் டாக்டர் பட நடிகை ப்ரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, ராதிகா, சூரி, தங்கதுரை உள்ளிட்ட பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிராமத்து பின்னணியில், உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் படமாக உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இயக்குனர் பாண்டியராஜ் இப்படத்தின் கதையை முதலில் நடிகர் சிம்புவிற்காகதான் எழுதினாராம்.

surya

ஆனால் அப்பொழுது அவர் வேறு ஒரு படத்தில் நடித்ததால் இதில் நடிக்க முடியவில்லையாம். பின்னர் இதுகுறித்து தயாரிப்பாளரிடம் கூறவே அவர், சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். பின்னர் இக்கதையை சூர்யாவிடம் கூற அவருக்கும் பிடித்துப்போனதாம். அதனைத் தொடர்ந்து சூர்யாவே எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.