ஊ சொல்றியா மாமா.. கருப்பு உடையில் கவர்ச்சி ஆட்டத்தை தொடங்கிய யாஷிகா! திணறடிக்கும் வீடியோ!!

ஊ சொல்றியா மாமா... கருப்பு உடையில் கவர்ச்சி ஆட்டத்தை தொடங்கிய யாஷிகா! திணறடிக்கும் வீடியோ!!


yashika-video-to-pushpa-song

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

பின்னர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது குணமடைந்து மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குதுகலப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி ஆட்டம் போட்ட பாடல்  'ஊ.. சொல்றியா மாமா'. இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலுக்கு நடனமாடி பல பிரபலங்களும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் யாஷிகா இப்பாடலுக்கு செம கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பெருமளவில் வைரலாகி வருகிறது.