சினிமா

தல அஜித்துடன் நடிக்க யாஷிகா போட்ட பக்கா கண்டிஷன்!! ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

Summary:

yashika condition to act with ajith

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறிவிட்டார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான வீடியோ, புகைப்படங்களை வழக்கமாக வைத்திருக்கும் யாஷிகா சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்துள்ளார்.

yashika with thala க்கான பட முடிவு

அப்பொழுது  அவரிடம் ரசிகர் ஒருவர், எந்த நடிகர் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு யாஷிகா தல அஜித் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை என்று  தெரிவித்துள்ளார்.

ajith க்கான பட முடிவு

மேலும் அவற்றில் குறிப்பாக ஒரு கண்டிஷன் ஒன்றையும் கூறியுள்ளார். அதில் நான் அஜித்துடன் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் ஆனால் அவருக்கு தங்கையாக மட்டும் என்னால் நடிக்க முடியாது அவள் என்னுடைய ஏஞ்சல் என கூறியுள்ளார். இந்நிலையில் தல ரசிகர்கள் யாஷிகாவை கொண்டாடி வருகின்றனர்.
 


Advertisement