பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
WOW.. செம க்யூட்.. முதன்முறையாக தனது மகன்களின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்- நயன் தம்பதியினர்...!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் எழுத்தாளர் தயாரிப்பாளர் என பல திறமைகளுடன் தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார்ரான நயன்தாராவும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். மேலும் தனது குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா தனது மகன்களின் பெயர்களை அறிவித்திருந்தார். அதாவது நயன்தாராவின் மூத்த மகன் பெயர் "உயிர் ருத்ரேனில் N சிவன்" மற்றும் மற்றொரு மகனுக்கு "உலக் தெய்விக் N சிவன்" என்று பெயர் வைத்துள்ளனராம்.
இந்த நிலையில் தனது மகன்களின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை இன்பஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.