சினிமா

பிக் பாஸ் காயத்ரியின் கர்ப்பத்திற்கு இந்த நடிகர்தான் காரணமாம்! வெளியானது புகைப்படம்!

Summary:

Who is the reason for Kayathri raguram pregnancy

நடிகையும், பிரபல நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பதுபோல் புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் வியப்படைய வைத்தது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடர் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் நடிகை காயத்ரி ரகுராம்.

காயத்ரி ரகுராம் அவரது பெயரை கேள்விப்பட்டவுடன் பிக்பாஸ் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் காயத்ரி. இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். அந்த புகைப்படத்தில் காயத்ரி ரகுராம் ஒரு காரில் உட்கார்ந்திருப்பது போன்றும் அவர் கர்ப்பிணியாக இருப்பது போன்றும் இருந்தது.


சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆனதால் இந்தப்புகைப்படத்தை பார்த்த அனைவரும் சற்று குழம்பித்தான் போனார்கள். இந்நிலையில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது கர்ப்பத்திற்கு காரணம் என்ன என்பதை ஒரு புகைப்படம் வெளியிட்டு விளக்கி உள்ளார் காயத்திரி. 

தற்போது காயத்திரி ஒரு படத்தில் நடித்து வருகிறார்காம். அந்த படத்தில் இவர் நடிகர் ஹரிஷ் உத்தமனுக்கு மனைவியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் இவர் கர்ப்பமாக இருப்பது போன்றும் காட்சி இடம்பெறுகிறதாம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்றும் கூறி ஹரிஷ் உத்தமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். 


Advertisement