அச்சச்சோ.. சினிமா தியேட்டரில் ஹீரோ என்ட்ரியின்போது போட்டோ, வீடியோ எடுக்குறீங்களா?.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை செய்தி.!

அச்சச்சோ.. சினிமா தியேட்டரில் ஹீரோ என்ட்ரியின்போது போட்டோ, வீடியோ எடுக்குறீங்களா?.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை செய்தி.!



Warning for Cinema Theatre Video Capture Persons 

 

திரையரங்கில் நாம் திரைப்படம் பார்க்க செல்லும்போது, அன்றைய நாட்களில் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு டி.வி.டி & வி.சி.டி கேஸட்டுகளாக வெளியிடப்படும். 

ஆனால், இன்றளவில் ஒவ்வொருவரின் கையிலும் செல்போன் இருக்கிறது. ரசிகர்கள் என்ற பெயரில் திரையில் நாயகர்கள் தோன்றும்போது, அதனை வீடியோ அல்லது போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். 

முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம் என பதிவிடப்படும் விடியோக்கள் ஏராளம். இவை பெரும்பாலும் திரையரங்கு நிர்வாகத்தால் தடுக்க இயலாத சூழலை கொண்டுள்ளன. 

ஏனெனில் இவர்களின் செயலை தடுக்க படத்தை நிறுத்தினால், ரசிகர்கள் ஆத்திரத்தில் என்ன செய்வார்கள் என்ற பயம் திரையரங்கு நிர்வாகத்திற்கு உண்டு. அவ்வாறான சர்ச்சை செயல்கள் அவ்வப்போது நடந்துகொண்டு இருக்கின்றன. 

cinema

இந்த நிலையில், திரைப்படத்தை நாம் பார்க்கச்செல்லும்போது, திரையில் ஒளிபரப்பு செய்யப்படும் காட்சிகளை செல்போனில் போட்டோ அல்லது வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் பரப்பினால் அவை சினிமோக்ராபிக் சட்டப்படி குற்றமாக கருதப்படும். 

அதன்படி குறைந்தபட்சமாக நமக்கு ரூ.3 இலட்சம் அபாரதத்துடன், 3 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வழிவகை செய்யும். நாம் இன்றளவில் பார்க்கும் பல விடியோக்கள் திரையரங்கில் எடுக்கப்பட்டாலும், பின்னாட்களில் அவை ஒழுங்குபடுத்தப்படும் பட்சத்தில் கட்டாயம் தண்டனைக்கு வழிவகை செய்யும்.

நகரங்களில் எந்நேரமும் மக்கள் வரவேற்புடன் இருக்கும் திரையரங்குகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள், திரையில் படம் பதிவு செய்யப்படும்போது நமது செயப்பாடுகளை கண்காணித்து எச்சரிக்கும் நிகழ்வுகள் நடக்கும். ஒருசில இடங்களில் அவை மோதலுக்கும் வழிவகை செய்து இருக்கிறது.