சினிமா

உயிரிழந்த நடிகர் வடிவேல் பாலாஜி இப்படிப்பட்டவரா? ஆச்சரியமான விஷயங்களுடன் விஜே ரம்யா வெளியிட்ட கண்கலங்க வைக்கும் வீடியோ!

Summary:

Vj ramya video about vadivelu balaji

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வடிவேலு பாலாஜி. சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பை அடுத்து அவர் ஒருசில வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் 45 வயது நிரம்பிய அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, கை கால்கள் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவேலு பாலாஜியின் இந்த மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் வடிவேலு பாலாஜி இறந்து ஒரு வாரங்கள் ஆனநிலையில், தொகுப்பாளினி ரம்யா அவருடனான நினைவுகள் குறித்து வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், விஜய் டிவியில் வடிவேலு பாலாஜி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகும்போது அந்த எபிசோடை நான்தான் தொகுத்து வழங்கினேன். அப்பொழுது அவர் நீல நிற ஜிப்பா அணிந்து நடந்துவந்தார். நான் வடிவேலுதான் சிறப்பு விருந்தினராக வருகிறார் என எண்ணி எழுந்து குட்மார்னிங் சொன்னேன். அவரும் ஜாலியாக குட் மார்னிங் உட்காரும்மா என்று அசால்டாக சொல்லிவிட்டு போனார். 

 இவர் பெரும் திறமைசாலி. அனைவரும் ஸ்கிரிப்ட் வைத்து மனப்பாடம் பண்ணிதான் நடிப்பார்கள். ஆனால் அவர் ஸ்டேஜில் இருப்பதை பார்த்து இடத்திற்கு ஏற்றது போல உடனே கன்டென்ட் ரெடி பண்ணி நடித்து அசத்துவார். 
அவர் தங்கமான மனுஷன். யாரையும் ஹர்ட்  செய்து பேச மாட்டார்.  அவரைப் பற்றி பேசும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அவர் தற்போது இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.


Advertisement