சினிமா

இதை, இதைத்தான் எதிர்பார்த்தோம் அருமை ..உச்சகட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி அஞ்சனாவின் ரசிகர்கள், எதற்காக தெரியுமா?

Summary:

vj anjana fans feel very happy

பிரபல தொலைக்காட்சியில்  10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வி ஜே அஞ்சனா.

இவர் நீண்ட வருடங்களாக  “கயல்” பட நடிகர் சந்திரனை காதலித்து வந்த நிலையில் அந்த ஜோடிக்கு கடந்த 2015 , நவம்பர் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் கடந்த 2016 மார்ச் மாதம் அவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை அஞ்சனாவின் கணவர் சந்திரன் கடந்த ஜூன் 3ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த தகவலை கேட்ட சஞ்சனாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆன நிலையில் சந்திரனும், அஞ்சனாவும் தனது குழந்தை ருத்ராக்ஸ் உடன்  போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட அஞ்சனாவின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


 


Advertisement