திரையுலகமே பெரும் அதிர்ச்சி!! தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

திரையுலகமே பெரும் அதிர்ச்சி!! தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..


vj-aananda-kannan-passed-away-2RCV4T

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல விஜே ஆனந்த கண்ணன் நேற்று இரவு காலமானார்.

சன் மியூசிக் சேனல் தொடங்கப்பட்ட காலத்தில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் விஜே ஆனந்த கண்ணன். டிவி நிகழ்ச்சிகளை தொங்குவது வழங்குவது மட்டுமில்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் இவர் திறம்பட தொகுத்துவழங்கியுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இயங்கிவந்த தமிழ் தொலைக்காட்சியில்தான் இவர் முதன் முதலில் தொகுப்பாளராக பணியாற்றிவந்தார். பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர்ந்த ஆனந்த கண்ணன் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜேவாக இருந்துவந்தார்.

VIj Anandha Kannan

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவந்த இவர் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் ஆனந்த கண்ணன் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு திடீரென இறந்து விட்டார்.

விஜே ஆனந்த கண்ணன் மறைவு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.