அரசியல் இந்தியா சினிமா

ஐஸ்வர்யா ராயை தவறாக சித்தரித்த விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

Summary:

vivek oberois meems goes viral controversy

பாலிவுட் நடிகர்களில் மிகவும் பிரபலமான ஒருவர் நடிகர் விவேக் ஓபராய். இவர் தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான பிஎம் நரேந்திர மோடி என்ற படத்தில் பிரதமர் மோடியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதேசமயம் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியதால் மக்கள் தேர்தல் முடிவை தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். 

vivek oberoi க்கான பட முடிவு

இதில் சிலர் இந்த கருத்து கணிப்புகளை சித்தரிக்கும் விதமாக மீம்ஸ்களை உருவாக்கி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு இந்த தேர்தல் கருத்து கணிப்பை ராஞ்சியை சேர்ந்த பவன் சிங்க் என்பவர், உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதல்களான சல்மான் கான், விவேக் ஓபராய் மற்றும் தற்போதைய கணவரான அபிஷேக் பச்சன், அவரது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு மீம்ஸை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவை கண்ட நடிகர் விவேக் ஓபராய், `ஹாஹா! கிரியேடிவ்!.. இங்கு அரசியல் இல்லை.. வாழ்க்கை மட்டுமே!” என எழுதி அதே மீம்ஸை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ட்விட்டரில் மட்டுமல்லாமல் நடிகர் விவேக் ஓபராயின் வாழ்க்கையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை இழிவுபடுத்தும் விதமாகவும், ஒரு சிறுமியின் புகைப்படத்தை (ஐஸ்வர்யா ராயின் மகள்) தவறாக பயன்படுத்தியதாகவும் கூறி பலர் விவேக் ஓபராய் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையம் விவேக் ஓபராய்க்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் வரும் மே 25 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறும் குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விவேக் ஓபராய், "நான் மன்னிப்புக்கேட்கும் அளவிற்கு அப்படி என குற்றம் செய்துவிட்டேன். வேறு ஒருவரின் மீம்ஸை தானே ஷேர் செய்தேன்; அது ஒரு குற்றமா? நான் நடித்த பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடைவிதிக்க வேண்டும் என்றே சிலர் இதனை பெரிய பிரச்னை ஆக்குகின்றனர்" என தெரிவித்துள்ளார்.


Advertisement