உளவியல் ரீதியாக விஸ்வாசம் எப்படி பார்க்கப்படுகிறது? மருத்துவரின் கருத்து

உளவியல் ரீதியாக விஸ்வாசம் எப்படி பார்க்கப்படுகிறது? மருத்துவரின் கருத்து



viswasam-review-by-psychology-doctor

வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித். பொங்கலை முன்னிட்டு கடந்த வியாழனன்று வெளியான விஸ்வாசம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பொங்கலை குடும்பத்துடன் திரையரங்கில் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது விஸ்வாசம் என்றே சொல்ல வேண்டும்.

உளவியல் ரீதியாக விசுவாசம் படம் சொல்ல வரும் கருத்து என்ன; அதில் வரும் கதையும் காட்சிகளும் உளவியல் ரீதியாக எப்படி கையாளப்பட்டுள்ளது என்பதனை குறித்து உளவியல் மருத்துவர் அபிலஷா என்பவர் மனம் சொல்லுது என்ற யூட்யூப் சேனல் மூலம் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

viswasam

அதில் அவர் "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கும் விஸ்வாசம் படத்தினையும் ஒரு பண்டிகை மூலம் துவங்கியுள்ளார் இயக்குனர். குடும்பங்களை முன்னிட்ட இந்தக் கதை தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு பாசப்போராட்டம். இந்த படத்தின் மூலம் அஜித்தின் நடிப்பு மேலும் ஒரு படி மெருகேறி உள்ளது. சண்டைக் காட்சிகளில் பொருத்தவரை காட்டுமிராண்டித்தனமாக இல்லாமல் காட்டா குஸ்தி என்ற ஒருவிதமான கலையை பயன்படுத்தி உள்ளனர்.

உளவியல் ரீதியாக படத்தின் நாயகன், நாயகி மற்றும் மொத்த படக்குழுவையும் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். படத்தில் கதாநாயகன் அஜித் பைக் ஓட்டும் அனைத்து காட்சிகளிலும் ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் வருகிறார். இது அனைவருக்கும் ஒரு சரியான பாடமாக அமைந்துள்ளது. நிச்சயம் இதன் மூலம் அவரது ரசிகர்கள் இனிமேல் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக அணிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். 

viswasam

மேலும் கணவன்-மனைவிக்குள் ஒரு விதமான பிரச்சனைகள் உருவாகும் போது அதை குடும்பத்திலுள்ளவர்கள் எப்படி கையாள வேண்டும்; கணவன் மனைவி பிரிந்து வாழ்வதால் ஏற்படும் பிரச்சனைகள்; குழந்தைகளை எப்படி சுதந்திரமாக வளர்க்க வேண்டும்; தந்தையின் பாதுகாப்பு குழந்தைக்கு எவ்வளவு அவசியம் என்பது குறித்த பல்வேறு உளவியல் ரீதியான தகவல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன" என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ள கருத்துக்களை வீடியோவில் பார்க்கவும்.