தொடரும் விஸ்வாசம் படத்தின் சாதனை! இங்கேயும் சாதனையா? தெறிக்கவிடும் தல ரசிகர்கள்!viswasam-movie-in-amazon-prime

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது விஸ்வாசம் திரைப்படம். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிவா மற்றும் அஜித் கூட்டணி சேர்ந்ததால் விஸ்வாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

வீரம், வேதாளம் இரண்டும் வெற்றிப்படங்கள் என்றாலும் விவேகம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நான்காவதாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது இந்த படம்.

viswasam

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் ஆன்லைன் உரிமையை சுமார் 11 கோடிக்கு வாங்கியது அமேசான் நிறுவனம். இந்நிலையில், இப்படத்தினை கடந்த 26ம் தேதி தங்களது வலைத்தளத்தில் வெளியிட்டது அந்நிறுவனம்.

அதனை தொடர்ந்து ஒரே நாளில் அமேசான் தளத்தில் அத்திரைப்படத்தை பார்த்தவர்கள் மட்டும், வழக்கமான வாடிக்கையாளர்களை விட பல மடங்கு அதிகம் என்ற சாதனையை படைத்துள்ளது விஸ்வாசம் திரைப்படம்.