சினிமா

பயங்கர மாடர்னாக மாறிய விஸ்வாசம் பட சிறுமி! அவரா இது? லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

Summary:

Viswasam movie baby anika latest photos

தல அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது விஸ்வாசம் திரைப்படம். படம் வெளியாகி 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் விஸ்வாசம் படத்தின் தாக்கம் இன்றுவரை தமிழ் சினிமாவில் உலாவிக்கொண்டுதான் இருக்கிறது.

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அஜித் - நயன்தாராவுக்கு மகளாக சிறுமி அனிகா சுரேந்திரன் நடித்திருந்தார். தற்போது 14 வயதாகும் சிறுமி அனிகா கேரளாவை பூர்விகமாக கொண்டவர். சோட்டா மும்பை என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மலையாளம், தமிழ் என இதுவரை 16 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அடுத்ததாக விஜய் சேதுபதி நடித்துவரும் மாமனிதன் படத்திலும் அனிகா முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் பள்ளி சிறுமியாக, குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அனிகா தற்போது மாடர்ன் மங்கையாக, கவர்ச்சியாக, ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ளார்.

அந்த சிறுமியா இது? என ரசிகர்கள் கமெண்ட் செய்யும் அளவிற்கு அவரது சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

View this post on Instagram

Yo-ho🍭 . 👗:Amma P.C:Amma

A post shared by Anikha surendran (@anikhasurendran) on


Advertisement