சினிமா

தெறிக்கவிடும் தலையின் "அடிச்சுதூக்கு"! வெளியானது விஸ்வாசம் சிங்கள் ட்ராக்

Summary:

viswaasam single track

சமீபத்தில் பேட்ட படத்தின் பாடல்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் போட்டியில் குதிக்கும் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் சிங்கள் ட்ராக் இன்று வெளியாகி பட்டையை கிளப்புகிறது.

பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் திரைப்படத்துக்கு, அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வீரம், விவேகம், வேதளம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இதனையும் இயக்குநர் சிவாவே இயக்குகிறார். 

விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவும், அஜித்துடன் 4 ஆவது முறையாக கைகோர்த்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

டி.இமான் இசையில், கவிஞர் விவேக்கின் வரிகளில் வெளியாகியுள்ள "அடிச்சு தூக்கு"  என்ற பாடல் அஜித் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இதோ அந்த பாடல் உங்களுக்காக:


Advertisement