சினிமா

அடிமட்ட அளவிற்கு சென்ற தல அஜித்! விசுவாசம் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?

Summary:

Visuvasam movie status in america

தமிழ் சினிமாவின் தல அஜித். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தல படம் வெளியாக போகிறது என்றாலே அஜித் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விசுவாசம் திரைப்படத்தில் நடித்துள்ளார் தல அஜித்.

படப்பிடிப்பு  முடிந்து, அடுத்தகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் வரும் பொங்கலுக்கு விசுவாசம் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது, ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவில் இப்படத்திற்கு மிக மோசமான வரவேற்புதான் கிடைத்துள்ளது.

இந்த படத்தை வெறும் ரூ 80 லட்சத்திற்கு தான் வாங்கியுள்ளார்களாம், இதற்கு முன்பு விவேகம் ரூ 2.5 கோடி வரை வியாபாரம் ஆனது குறிப்பிடத்தக்கது. இப்படி அஜித்தின் மார்க்கெட்டை அடிமட்ட அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.


Advertisement