விஸ்வாசம் படம் சூப்பரா? சுமாரா? என்ன சொல்கிறார்கள் தல ரசிகர்கள்?

விஸ்வாசம் படம் சூப்பரா? சுமாரா? என்ன சொல்கிறார்கள் தல ரசிகர்கள்?


Visuvasam movie review in tamil

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விசுவாசம் படத்தில் நடித்துள்ளார் அஜித். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை கொடுத்த இந்த கூட்டணி தற்போது விசுவாசம் என்ற நான்காவது படைப்பை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது.

வீரம், வேதாளம் படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் விவேகம் திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் விசுவாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.

visuvasam

இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று விசுவாசம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விசுவாசம் படம் வெற்றி படமா? தோல்வி படமா? சூப்பர் படமா? சுமார் படமா என கேட்டால், அஜித் ரசிகர்களை பொறுத்தவரை விசுவாசம் திரைப்படம் சூப்பர். ஆனால் நடுநிலையான ரசிகர்களை கேட்கும்போது விசுவாசம் படம் சுமார் என்றுதான் கூறுகின்றனர்.

நயன்தாராவை காதலித்து திருமணம் செய்வதும், பின்னர் நயன்தாரா தனது மகளுடன் முன்பைக்கே செல்வதும். தனது மகள் மற்றும் மனைவியை தேடி செல்லும் அஜித் அங்கு தனது மகளுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதே படத்தின் கரு. படத்தின் கதை, திரைக்கதை என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரமாண்டமாக இல்லை என்றாலும், ரசிகர்களின் விருப்பத்தை அஜித் பூர்த்தி செய்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.