சினிமா

விஸ்வாசம் படம் யாருக்கெல்லாம் பிடிக்கும்? பிடிக்காது? கட்டாயம் இத படிங்க தெரியும்!

Summary:

Visuvasam movie review for ajith fans

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துள்ளார் தல அஜித். வீரம், வேதாளம், விவேகம், தற்போது விசுவாசம். வீரம், வேதாளம் திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் விவேகம் படம் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் அதே கூட்டணி நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் இணைந்துள்ளது.

பொங்கலை முன்னிட்டு விசுவாசம் திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், வசூல் ரீதியாக படம் வசூலை வாரி குவிகிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

விசுவாசம் படம் யாருக்கெல்லாம் பிடிக்கும்? பிடிக்காது?

பில்லா படம் மாதிரி அஜித்தை மாஸா பார்க்க வேண்டும், மங்காத்தா மாதிரி க்ளாஸா பார்க்கவேண்டும் என்று செல்லும் ரசிகர்களுக்கு நிச்சயம் விசுவாசம் படம் பிடிக்க வாய்ப்பில்லை. ஏனெனில் விசுவாசம் படம் முழுவதும் தல அஜித் அமைதியாக, சென்டிமெண்டான ரோலில் நடித்துள்ளார்.

பேமிலி செண்டிமெண்ட், பாசம், குடும்பத்தோட படத்துக்கு போனோமா, ஒரு நல்ல படம் பார்த்தோமா, திருப்தியா பீல் பண்ணுனோமா அப்டினு நெனச்சு விசுவாசம் படத்துக்கு போனீங்கன்னா நிச்சயம் விசுவாசம் படம் உங்களுக்கு பிடிக்கும்.


Advertisement