சினிமா

24 மணி நேரத்தில் அஜித்தின் விசுவாசம் செய்த இமாலய சாதனை! என்ன தெரியுமா?

Summary:

Visuvasam motion poster achievements

இயக்குனர் சிவா, தல அஜித் கூட்டணியில் உருவாகிவரும் விசுவாசம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்தனா. ஆனால் பொங்கலுக்கு முன்னதாகவே படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தாண்டி நான்காவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதாலும், படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் திடீரென்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி வெளியான விசுவாசமே மோஷன் போஸ்டர் இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளது. அதாவது இதுவரை 375 K லைக்குகளையும், 3.7 பார்வையாளர்களையும் கடந்துள்ளது விசுவாசம் மோஷன் போஸ்டர். மேலும் இருபத்தி ஆறாயிரம் பேர்க்கு மேல் இதற்கு கமெண்ட் செய்துள்ளனர். ஒரு மோஷன் போஸ்டருக்கு இவ்ளளவு பார்வைகளும், விருப்பங்களும் இதுவே முதன்முறை.


Advertisement