சினிமா

விசுவாசம் படத்தில் தல அஜித் நடிக்கும் கேரக்டர் வெளியாகியுள்ளது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Summary:

visuvasam cinima - thala ajith name - thukku durai


தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு பாரம்பரியமாக உள்ள ஒரு விஷயம் என்னவென்றால் முன்னணி நட்சத்திரங்கள் அல்லது சூப்பர் ஹிட் ஆகக்கூடிய படங்களில் உள்ள கதாநாயகர்கள், வில்லன்கள், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர்களின் கேரக்டரின் பெயர்  மிகவும் முக்கியமானது ஏனென்றால் அந்த  படம் எப்பொழுது நம் நினைவுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அதில் நடித்திருக்கும்  கேரக்டர் பெயரும்  சட்டென்று நம்  நினைவுக்கு வரும் அந்த அளவுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

உதாரணமாக சூப்பர் ஹிட் ஆனா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த  பாட்ஷா படத்தில் வரும் கேரக்டர் பெயர் நம் அனைவருக்கும் இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது அதில் சூப்பர் ஸ்டார்  பெயர் மாணிக்கம். அதில் வில்லனாக நடித்திருக்கும்  ரகுவரன் பெயர் ஆண்டனி  என்பதை  இன்றளவும் நம் அனைவருக்கும் நினைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் தற்பொழுது அல்டிமேட் ஸ்டார் தல அஜித் தற்போது , ‘விஸ்வாசம்’ படத்தில் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 
நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் கூட சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. 

சிவா இயக்கத்தில் ‘வீரம்’ படத்தில் விநாயகம், ‘வேதாளம்’ படத்தில் கணேஷ், ‘விவேகம்’ படத்தில் ஏகே என்ற வரிசையில் ‘விஸ்வாசம்’ படத்தில் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


Advertisement