சினிமா

அமலாபாலுடன் இரண்டாவது திருமணம்? முதன் முறையாக பதில் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்!

Summary:

Vishunu visal refused second marriage with amala paul

இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து, பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குனர் ஏ.எல் விஜயை விவாகரத்து செய்தார் நடிகை அமலாபால். பின்னர் நடிகை அமலாபால் பல படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது “ஆடை, அதோ அந்த பறவை போல” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதே போல் அண்மையில் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ரஜினி என்ற பெண்ணை நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து, இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில், தற்போது விவாகரத்து வாங்கியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் அமலாபாலும் நடிகர் விஷுனு விஷால் இருவரும் சேர்ந்து ராட்சசன் படத்தில் நடித்திருந்தனர். அதைத்தொடர்ந்து நடிகை அமலாபால் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘‘ என்ன ஒரு முட்டாள்தனமான செய்தி. தயவுசெய்து பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள்தான், நாங்களும் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறோம். இது தொடர்பாக யாரும் எதுவும் எழுத வேண்டாம்’’ என்று ஒரு வணக்கத்துடன் பதிவிட்டுள்ளார். 


Advertisement